ஊர்கள் – பாடலில் உள்ளவை

பாடலில் உள்ள ஊர்கள்:

அகப்பா – சேரர்களின் கோட்டையுடைய ஊர் – நற்றிணை 14-4, பதிற்றுப்பத்து 22-26

அட்டவாயில் – அகநானூறு 326-5

அம்பர்அரிசில் என்ற ஆற்றின் கரையில் இருந்த ஊர் – நற்றிணை 141-10, புறநானூறு 385-9

அரிமணவாயில் – புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் என்ற ஊர் – அகநானூறு 266-13

அரிமணவாயில் உறத்தூர் – எவ்வி என்ற குறுநில மன்னனின் ஊர் – அகநானூறு 266-13

அரையம் – இருங்கோவேள் என்ற குறுநில மன்னனின் ஊர் – புறநானூறு 202-8

அலைவாய் – திருச்சீரலைவாய் என்று போற்றப்பட்ட இன்றைய திருச்செந்தூர் – அகநானூறு 266-20, திருமுருகாற்றுப்படை 125

அழுந்தூர் – அகநானூறு 246-4

அழுந்தை – திதியன் என்ற குறுநில மன்னனின் ஊர் – அகநானூறு 196-11

அழும்பில் – சோழரின் ஊர் – அகநானூறு 44-15, மானவிறல் வேள் என்ற குறுநில மன்னனின் ஊர் – மதுரைக்காஞ்சி 345

ஆமூர் – குறும்பொறை என்ற மலையின் கிழக்கில் உள்ள ஊர் – அகநானூறு 159-19, சோழரின் ஊர் – ஐங்குறுநூறு 56-2, புறநானூறு 801, ஓய்மா நாட்டு மன்னனான நல்லியக்கோடனின் நாட்டில் உள்ள ஊர் – சிறுபாணாற்றுப்படை 188

ஆர்க்காடு – அழிசி என்ற குறுநில மன்னனின் ஊர் – நற்றிணை 190-6, குறுந்தொகை 258-7, சோழரின் ஊர் – நற்றிணை 227-6

ஆரேற்று – சோழரின் ஊர் – நற்றிணை 265-6

ஆலங்கானம் (தலையாலங்கானம்) – சோழ நாட்டு ஊர், பாண்டியன் நெடுஞ்செழியன் சேரன், சோழன் ஆகிய மன்னர்களையும் திதியன், எருமையூர் தலைவன், எழினி மற்றும் இருங்கோ வேண்மான் ஆகிய குறுநில மன்னர்களையும் இந்த ஊரில் தோற்கடித்தான் – அகநானூறு 36-14, 175-11, 209-6, நற்றிணை 387-7, புறநானூறு 23-16, மதுரைக்காஞ்சி 127

ஆலமுற்றம் – சிவன் கோவிலையுடைய ஓர் ஊரின் பெயர் – அகநானூறு 191-17

ஆவினன்குடி – முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி – திருமுருகாற்றுப்படை 176

இடையாற்று – சோழரது ஊர் – அகநானூறு 141-23

இருந்தையூர் – பரிபாடல் திரட்டு 1-5

இருப்பை – விராஅன் என்ற குறுநில மன்னனின் ஊர் – நற்றிணை 260-7, 350-4, ஐங்குறுநூறு 58-2

இலங்கை – ஓய்மான் வில்லியாதனின் தலை நகரம், தொண்டை நாட்டில் ஒரூர் –  புறநானூறு 379-6, சிறுபாணாற்றுப்படை 120

ஈர்ந்தை – புறநானூறு 180 -7

உறந்தை – சோழரது ஊர்- அகநானூறு 4-14, 6-5, 93-5, 122-21, 137-6, 226-14, 237-14, 369-14, 385-4, நற்றிணை 400-7, குறுந்தொகை 116-2, புறநானூறு 39-8, 58-9, 352-10, 395-19, சிறுபாணாற்றுப்படை 83, பட்டினப்பாலை 285

ஊணூர் – தழும்பன் என்ற குறுநில மன்னனின் ஊர் –  அகநானூறு 220-13, 227-18, நற்றிணை 300-10, புறநானூறு 348-5

எயில் – ஆந்தை என்பவனின் ஊர்- புறநானூறு 71

எயிற்பட்டினம் – குறுநில மன்னனான நல்லியக்கோடனின் ஊர், பட்டினம் என்று பாட்டில் உள்ளது  – சிறுபாணாற்றுப்படை 153

எருமையூர் – அகநானூறு 36-17

ஏரகம் – இன்றைய சுவாமிமலை – திருமுருகாற்றுப்படை 189

ஒடுங்காடு – அகநானூறு 91-12

ஒல்லையூர் – புறநானூறு 242-6

கச்சி – இன்றைய காஞ்சீபுரம்.  குறுநில மன்னன் இளந்திரையன் கச்சியோன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான் – பெரும்பாணாற்றுப்படை 420

கரும்பனூர் – புறநானூறு 384-10

கருவூர் – சேர நாட்டில் உள்ள ஓர் ஊர் – அகநானூறு 93-21

கழாஅர் – மத்தி என்பவனின் ஊர் – அகநானூறு 6-20, 226-8, ஐங்குறுநூறு 61-3, சோழரின் ஊர் – அகநானூறு 222-5, 376-4, நற்றிணை281-3

கழுமலம் – சேர நாட்டிலுள்ள ஓர் ஊர், சோழன் பெரும்பூண் சென்னி சேர மன்னனை தோற்கடித்த இடம் – அகநானூறு 44-13, 270-9

கள்ளில் – அவியன் என்பவனின் ஊர் – அகநானூறு 271-12

கள்ளூர் – அகநானூறு 256-15

காண்டவாயில் – நற்றிணை 38-7

காமூர் – கழுவுள் என்ற குறுநில மன்னனின் ஊர் – அகநானூறு 135-13, 365-12

கானப்பேர் – தற்போதைய காளையார் கோயில் – புறநானூறு 21-6

கானலம் பெருந்துறை – தித்தன் வெளியன் என்பவனது ஊர் – அகநானூறு 152-6 கானலம் பெருந்துறை என்ற சொற்கள் அழகிய கடற்கரைச் சோலையையுடைய பெரிய துறை என்றும் உபயோகிக்கப்பட்டுள்ளன – அகநானூறு 210-9, 280-14, 300-4

கிடங்கில் – நற்றிணை 65-2, சிறுபாணாற்றுப்படை 160

குடந்தை – சோழரின் ஊர் – அகநானூறு 60-13, நற்றிணை 379-7

குடவாயில் – சோழரின் ஊர், இன்றைய குடவாசல் என்ற ஊர் – அகநானூறு 44-18

குமரி – கன்னியாகுமரி – புறநானூறு 17-1, 67-6

குழுமூர் – அகநானூறு 168-5

குறும்பூர் – விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊர் – 328-8

குளவாய் – ஆதிசேடன் கோவிலுடைய ஊர் – 1-63

குன்றூர் – நற்றிணை 280-8, குறுந்தொகை 164-3

கூடல் – மதுரை – அகநானூறு 93-9, 116-14, 149-14, 231-13, 253-6, 296-12, 315-7, 346-20, கலித்தொகை 27-12, 30-11, 31-25, 35-17, 57-8, 92-11, நற்றிணை 39-10, 298-9, பரிபாடல் 8-28, 8-29, 10-40, 10-112, 10-129, 12-31, 19-8, 19-15, 20-26, 20-106, பரிபாடல் 17-23, 17-45, பரிபாடல் திரட்டு 2-4, 2-26, 2-46, 2-92, 12-2, புறநானூறு 58-13, 347-6, திருமுருகாற்றுப்படை 71, மதுரைக்காஞ்சி 429

கொடுமணம் – சேர நாட்டில் உள்ள ஓர் ஊர் – பதிற்றுப்பத்து 67-1, 74-5

கொற்கை – அகநானூறு 27-9, 130-11, 350-13, நற்றிணை 22-6, ஐங்குறுநூறு 185-1

கோடி – கொடிக்கரை – அகநானூறு 70-13

கோழி – புறநானூறு m 67-8, 212-8

சாய்க்காடு – நற்றிணை 73-9

சாய்க்கானம் – அகநானூறு 220-18

சிறுகுடிகாவிரி கரையில் உள்ள ஒரு சிற்றூர், அருமன், வாணன், பண்ணன் ஆகியவர்களின் ஊர் – அகநானூறு 54-14, 117-18, 204-12, 269-22, நற்றிணை 340-9, 367-6

சீத்தலை

சீத்தலை சாத்தனார் – அகநானூறு 53, 134, நற்றிணை 36, 127, 339

செந்தில் – திருச்செந்தூர் – புறநானூறு 55-18

செல்லி – அகநானூறு 216-12

செல்லூர் அகநானூறு 90-9, 220-3

தகடூர் – இன்றைய தருமபுரி, அதியமானின் தலை நகரம் – பதிற்றுப்பத்து 78-9

தலையாலங்கானம் – சோழ நாட்டு ஊர், பாண்டியன் நெடுஞ்செழியன் சேரன், சோழன் ஆகிய மன்னர்களையும் திதியன், எருமையூர் தலைவன், எழினி மற்றும் இருங்கோ வேண்மான் ஆகிய குறுநில மன்னர்களையும் இந்த ஊரில் தோற்கடித்தான் – புறநானூறு 19-12

தலையாறு – அகநானூறு 155-22

திருமருதம் – திருமருதத்துறை – பரிபாடல் 7-83, 11-30, கலித்தொகை 22-45, பரிபாடல் திரட்டு 2-72, கலித்தொகை 26-13

தேனூர் – ஐங்குறுநூறு 54-3, 55-2, 57-2

தொண்டி – அகநானூறு 10-13, 60-7, 290-13, நற்றிணை 8-9, 195-5, குறுந்தொகை 128-2, 210-2, 238-4, ஐங்குறுநூறு 171-3, 172-2, 173-2, 174-1, 175-4, 176-1, 177-4, 178-3, 179-3, 180, புறநானூறு 17-13, பதிற்றுப்பத்து 88-21

நறவு – பதிற்றுப்பத்து 60-12

நாலை –  பாண்டிய நாட்டில் அருப்புக்கோட்டை அருகில் உள்ள ஊர் – புறநானூறு 179-10)

நான்மாடக்கூடல் – மதுரை- கலித்தொகை 92-65, பரிபாடல் 1-3, 7-4

நியமம் – கோசர்களின் ஊர் – அகநானூறு 90-12

நீடூர் – எவ்வி என்ற குறுநில மன்னனின் ஊர் – அகநானூறு 266-10

நீர்ப்பெயற்று – துறைமுகப்பட்டினம், இன்றைய மகாபலிபுரம் – பெரும்பாணாற்றுப்படை 319

நீழல் –  எவ்வி என்ற குறுநில மன்னனின் ஊர் – அகநானூறு 366-12

நெய்தலங்கானல் – சோழன் இளஞ்சேட்சென்னி பிறந்த ஊர் – புறநானூறு 10-12

நெடுந்தெரு – நற்றிணை 161-5

பவத்திரி –  அகநானூறு 340-7

பாரம் – நற்றிணை 265-5, அகநானூறு 152-12

பாழி – நன்னனின் ஊர் – அகநானூறு 15-11, 142-9, 208-6, 258-1, 375-13, 396-3, வடுகரின் ஊர் – அகநானூறு 375-13

பிசிர் – பாண்டிய நாட்டில் உள்ள பிசிர் என்ற ஊர் – புறநானூறு 67-11

புகார் – காவிரிப்பூம்பட்டினம், அகநானூறு 110-4, 181-22, பதிற்றுப்பத்து 73-9, பட்டினப்பாலை 173

புறந்தை – இன்றைய பொறையாறு – அகநானூறு 100-13

பொதினி – அகநானூறு 61-16

பொறையாறு – நற்றிணை 131-8

போஒர்  – அகநானூறு 185-16, 326-11, நற்றிணை 10-7

போந்தை – ஆதன் என்ற குறுநில மன்னனின் ஊர் – புறநானூறு 338-4

மதுரை – கலித்தொகை 96-23, பரிபாடல் 11-48, 12-9, பரிபாடல் திரட்டு 9-3, 10-3, 11-3, புறநானூறு 32-5, சிறுபாணாற்றுப்படை 67, மதுரைக்காஞ்சி 699

மரந்தை – சேரரின் ஊர் (சில பாடல்களில் மாந்தை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது) – அகநானூறு 127-6, 376-18, நற்றிணை 35-7, 395-9, குறுந்தொகை 34-6, 166-3

மருங்கை – பாண்டியரின் ஊர் – நற்றிணை 358-10

மருங்கூர்ப்பட்டினம் – அகநானூறு 227-20, நற்றிணை 258-10

மாங்காடு – அகநானூறு 288-15

மாங்குடி – புறநானூறு 72-14

மாவிலங்கை – குறுநில மன்னன் நல்லியக்கோடனின் ஊர் – 176-6

முசிறி – துறுமுகத்தை உடைய சேர நாட்டின் ஊர், ‘யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங் கெழு முசிறி’  – அகநானூறு 57-15, 149-11, புறநானூறு 343-10

மையல் – மாவன் என்பவனின் ஊர் – புறநானூறு 71

வஞ்சி – அகநானூறு 263-12, 396-19, பரிபாடல் திரட்டு 7-11, புறநானூறு 11-6, 32-2, 39-17, 373-24, சிறுபாணாற்றுப்படை 50

வல்லம் – அகநானூறு 336-21, 356-13

வலாஅர் – புறநானூறு – 181-6

வாகை – வாகைப் போர் நடந்த ஊர் – அகநானூறு 125-19, குறுந்தொகை 393-3, எயினன் என்பவனது ஊர் – புறநானூறு 351

வியலூர்– நன்னன் என்ற குறுநில மன்னனின் ஊர் – அகநானூறு 97-13

விளங்கில் – கடலன் என்ற குறுநில மன்னனின் ஊர் – அகநானூறு 81-13, சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் ஊர் – புறநானூறு 53-4

வீரை – வேளிர் என்ற மன்னர் குடியின் ஊர் -அகநானூறு 206-13, வெளியன் தித்தன் என்ற வேளிர் மன்னரின் ஊர் – நற்றிணை 58-5

வெண்குடை – புறநானூறு 394-2

வெளியம் – சேரரின் ஊர் – அகநானூறு 359-6,

வேம்பி – முசுண்டை என்ற குறுநில மன்னனின் ஊர் – அகநானூறு 249-9

வேளூர் – அகநானூறு 166-4

 

%d bloggers like this: